கடற்படை நிவாரண குழுக்கள் எச்சரிக்கையுடன் உள்ளன

இந்த நாட்களில் பெய்யும் மழையால் ஏற்படுகின்ற எதிர்கால அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண குழுக்களை நிறுவ இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு மாகாணத்தின் தவலாம மற்றும் நெலுவ பகுதிகளிலும், சபராகமுவ மாகாணத்தின் இரத்னபுரி பகுதியிலும் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் மரைன் பிரிவு, கடற்படையின் உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU), சிறப்பு படகு படை. மற்றும் கடற்படை நீர்முழ்கி பிரிவு, மாலுமிகள் அடங்கிய நிவாரண குழுக்கள் இவ்வாரு நிருத்தப்பட்டுள்ளன.

மேலும், கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் சேகரிப்பதைத் தடுக்க கடற்படை தொடர்ச்சியான பாலங்கள், கால்வாய்கள் மற்றும் கல்வெட்டுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் மக்களுக்கு உதவி வழங்க கடற்படை தயாராக உள்ளது.