கடற்படை நடவடிக்கைகளால் 451.1 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன
2019 ஆகஸ்ட் 13 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 451.1 கிலோ பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.
வட மத்திய கடற்படை கட்டளை மூலம் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட ரோந்துப்பணியின் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் காணப்பட்டுள்ளதுடன் அதை மேலும் சோதிக்கும் போது அதுக்குழ் இருந்து 138.1 பீடி இலைகள் மீட்கப்பட்டன.
மேலும், அதே நாளில், தலைமன்னார் பழைய இரங்குதுறை பகுதிக்கு கரை ஒதுங்கிய 04 பொதிகளாக இருந்த 313 கிலோ பீடி இலைகள் வட மத்திய கடற்படை கட்டளை மூலம் மீட்கப்பட்டன.
அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மூலம் இன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 451.1 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டெடுக்கப்பட்டது. மேலும் இது மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை கடற்படை நடத்திய சோதனையின் போது கைவிடப்பட்ட 1000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடந்த சில நாட்களுக்குள் மீட்கப்பட்டுள்ளன, இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை எச்சரிக்கையாக உள்ளது.