83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது
2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் கீரமலே கடற்கரை பகுதியில் வைத்து 83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை. கடற்படை மீட்டது.
அதன்படி, யாழ்ப்பாணம் கீரமலே கடற்கரை பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான சில பொதிகள் காணப்பட்டுள்ளதுடன் அவை மேலதிக சோதிக்கும் போது கேரள கஞ்சா என கண்டுபிடிக்கப்பட்டன மேலும் அத்துடன் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த கேரள கஞ்சா கடல் வழியாக நாட்டிற்கு கொண்டுவந்துருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.மேலும் விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் யாழ்ப்பாண போலீஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கான கடற்படைத் தாக்குதல்களைத் தொடர்கிறதுடன் நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பை அகற்றுவதற்கான தேசிய முயற்சியை வலுப்படுத்துகிறது
|