சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரை கடற்படையினரினால் கைது
2019 ஆகஸ்ட் 05 ஆம் திகதி முல்லைதீவு அலம்பில் பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக நான்கு (04) நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், வழக்கமான ரோந்துப் பணியின் போது, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த 04 பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் புல்முடை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் 02 டிங்கிகள், 02 வெளிப்புற மோட்டார்கள் (ஓபிஎம்), 04 எல்இடி பிளப்கள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட டிங்கிகள், ஓபிஎம்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.