அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சாரம், தெற்கு கடற்படை கட்டளையால் இன்று (ஆகஸ்ட் 03) தொடங்கப்பட்டது.

அதன் படி, தெற்கு கடற்படை கட்டளையின் தலபதியுடைய வழிகாட்டுதலின் கீழ், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷின, நிபூன மற்றும் கடற்படை வரிசைப்படுத்தல் ஹம்பன்தோட்டைவுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கலுவெல்ல, கின்தோட்டை மற்றும் ஹம்பன்தோட்டை நகரத்தின் கடற்கரைகளை சுத்தம் செய்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் பெரிதும் சேதமடைந்த இந்த கடற்கரைகள், கடற்படையினர்களின் அர்ப்பணிப்பால் சாத்தியமானது. இன் நிகழ்வுகளில் தெற்கு கடற்படை கட்டளையின் துணை தளபதி மற்றும் தெற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட ஏராளமான கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இதேபோன்ற திட்டங்கள் தற்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் இயற்றப்பட்ட நீல ஹரித என்ற கருத்தின் கீழ் நடந்து வருகின்றன. அனைத்து கடற்படை தளங்களிலும் இவ்வாரான கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களை நடப்படுகின்றது.


கலுவெல்ல கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு


கின்தொடை கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு


ஹம்பன்தோட்டை நகரப் பகுதி கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு