ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” நடத்த கடற்படை உதவி

நய்னதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் கோவிலின் வருடாந்திர “ஆதிபூரம் பூஜை” வெற்றிகரமாக நடத்த வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 03) தங்களுடைய உதவியை வழங்கினர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ், இந்த நிகழ்வின் பல பணிகளை மேற்கொள்ள கடற்படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அதன்படி, குரிக்கட்டுவான் முதல் நைனதீவு வரை படகு சேவையை ஒருங்கிணைக்க அவர்கள் உதவி வழங்கினர். இது தவிர, இந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் உயிர் காப்புக்காக கடற்படையின் விரைவான பதில் மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) பயன்படுத்தப்பட்டது.

மேலும், இன் நிகழ்வு வெற்றிகரமாக நடத்த கடற்படையினரினால் வழங்கப்பட்ட பங்களிப்பு பக்தர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. பல்வேறு இன மற்றும் மத சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவுவதற்காக அனைத்து மதங்களின் மத நிகழ்வுகளுக்கும் தனது உதவியை வழங்குவதில் இலங்கை கடற்படை அதிக அக்கறை செலுத்துகிறது.