சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை நோர்வே தீவுக்கு அண்மையில் உள்ள கடல்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது (09) நபர்களை கடற்படை வீரர்கள் ஜூலை 28 அன்று கைது செய்துள்ளனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நோர்வே தீவைச் சுற்றி நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்களைக் கைது செய்தனர். ஒரு டிங்கிப்படகு, ஒரு ஓபிஎம் மற்றும் தடைசெய்யப்பட்ட வலையும் கடற்படை காவலில் வைக்கப்பட்டன. சந்தேக நபர்கள் 17 - 34 வயதுடைய கின்னியா மற்றும் சீனா பே பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் டிங்கி, ஓபிஎம் மற்றும் வலை ஆகியவற்றுடன் திருகோணமலையில் உள்ள மீன்வள உதவி இயக்குநரகம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த வகை தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கடல் சூழல் மற்றும் மீன் வளர்ப்பு இடங்கள் அழிக்கப்படுகின்றன. அந்த காரணியைக் கருத்தில் கொண்டு, இலங்கை கடற்படை கடல் வளங்களையும், விரும்பத்தக்க மீன் அடர்த்தியையும் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
|