கடற்படையினரால் இரண்டு (02) போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

கடற்படையினர் மற்றும் போலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து இன்று (ஜூலை 28) ஹம்பாந்தோட்டை, சிரிபோபுர பிரதேசத்தில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருளுடன் இருவர் கடற்படைக்காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் பன்வெவ உள்ள போலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சிரிபோபுர பகுதியில் 8 பொட்டலங்களில் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களையும், இரண்டு பொட்டலங்களில் 360 மில்லி கிராம் ஹஷிஷையும் கண்டெடுத்துள்ளனர். இந்த இருவரையும் கடற்படை காவலில் எடுத்த்தோடு இந்த நபர்கள் போதைபொருடகளை விற்பணை செய்துகொண்டு இருக்கும் போதே இவ்வாறு கடற்படையினரின் காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.. கடற்படை மேற்கொண்ட மேலதிக விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்கள், 19 மற்றும் 22 வயதுடையவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், போதைப் பொருளை அகற்றுவதில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கடற்படை கைது செய்துள்ளது.