அமெரிக்க மரைன் படையின் தூதுக்குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியுடன் சந்திப்பு
அமெரிக்க பசிபிக் மரைன் படையின் தூதுக்குழுவினர் மற்றும் இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், 2019 ஜூலை 24, அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ஜெயந்த குலரத்னவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
அதன் படி, இலங்கையின் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அலுவலகத்தில் திரு. இஸ்ரேல் ரோசா உட்பட மூன்று பேர் கொண்ட குழு, இவ்வாரு கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியை சந்தித்தனர். இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை மரையின் படையின் சிரேஷ்ட அதிகாரி கொமான்டர் இந்திக விஜரத்ன மற்றும் முதல் மரையின் படையின் கட்டளை அதிகாரி கொமான்டர் (மரையின்) கயங்க காரியவசம் ஆகியோரும் கழந்துகொன்டனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் மரைன் படையின் தூதுக்குழு 2019 செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஒரு பட்டறை தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதித்ததுடன், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளையும் பரிமாறிக்கொன்டனர்.