டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர்
கடற்படையினரினால் 2019 ஜூலை 24 ஆம் திகதி டிக்கோவிட மற்றும் நோரோச்சோலய் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேரை கைது செய்யப்பட்டது.
அதன்படி, 2019மார்ச் 23, அன்று, மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் நான்கு (04) சந்தேக நபர்களை வத்தல டிக்கோவிட்ட பகுதியில் வைத்து சோதிக்கும் போது அவர்களிடம் இருந்து 10 மில்லிகிராம் கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 38 வயதுக்குட்பட்ட சிலாபம் மற்றும் நீர் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் 2019 ஜூலை 23 அன்று புத்தலம் கரம்ப பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒருவரிடமிருந்து 305 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 34 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. . கைது செய்யப்பட்ட நபர் மாம்பூரி பகுதியில் வசிக்கும் 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அதன்படி, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மற்றும் போதைபொருள் வத்தல மற்றும் நோரோச்சோலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வத்தல டிக்கோவிட்ட பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கை
புத்தலம் கரம்ப பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கை