அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேர் கடற்படையினரினால் கைது
திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை 2019 ஜூலை 20 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சுற்றிவழப்பின் போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மஹவெலி கங்கையில் மணல் ஏற்றிய 02 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. அங்கு அவர்களமிருந்து இரு லாரி வண்டிகள் 03 மணல் பொதிகள் மற்றும் ஒரு மண் வெட்டி கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள், லாரி வண்டிகள், மணல் பொதிகள் மற்றும் மண் வெட்டி மேலதிக சட்ட சடவடிக்கைகளுக்காக முத்தூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் இலங்கை கடற்படை சுற்றுச்சூழல் அமைப்புகளில் இயற்கையான சகவாழ்வை சேதப்படுத்தும் சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்களைக் கைப்பற்றுவதற்காக அடிக்கடி சோதனைகள் மற்றும் தேடல் பணிகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்கிறது.