கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
2019 ஜூலை 18 ஆம் திகதி சிலாவதுர அரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட தேடலின் போது கடற்படையினரினால் கடலாமை இறைச்சியுடன் வைத்திருந்த ஒருவரை கைது செய்யப்பட்டன.
அதன் படி, வடமேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய தேடலின் போது அரிப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 கிலோ எடையுள்ள கடலாமை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. சந்தேகநபர் 41 வயதில் அதே பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டது. அவர் மற்றும் கடலாமை இறைச்சி சிலாவத்துர போலீசாரிடம் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், சமீபத்தில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட கடலாமை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் புதுமையான “நீல ஹரித சங்கிரமய” கருத்தின் கீழ் எப்போதும் கடற்படை வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையின் பரிசுகளின் இந்த அரிய உயிரினங்களை பாதுகாப்பது அனைத்து இலங்கையர்களின் முழு பொறுப்பாகும்.