சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள் கடற்படையினரினால் கைது
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேரை இன்று (ஜூலை 18) ஆம் திகதி திருகோணமலை உப்பாரு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.
அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் உப்பாரு பகுதியில் மேற்கொன்டுள்ள தேடலின் போது, இந்த 08 சந்தேக நபர்களையும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்தனர். சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் (ஓபிஎம்), அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலையும், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 15 கிலோ மீன்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 20 முதல் 48 வயது வரையிலான கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டிங்கி, ஓபிஎம், அங்கீகரிக்கப்படாத வலைகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களுடன் 08 சந்தேக நபர்களும் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
|