சட்டவிரோதமாக வைத்திருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் பறிமுதல் செய்யப்பட்டது
கடற்படையினர் மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து 2019 ஜூலை 17 அன்று தலை மன்னார் எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உலர்ந்த கடல் அட்டைகளுடன் ஒருவரை கைது செய்தனர்.
அதன் படி, வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து தலை மன்னார் எருக்குலம்பிட்டி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உலர்ந்த கடல் வெள்ளரிக்காயைக் கண்டுபிடித்தனர். 1018.9 கிலோ உலர்ந்த கடல் அட்டைகளுடன் வீட்டு உரிமையாரை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் அனுமதித்த வரம்பை மீறி, அதிக அளவு கடல் அட்டைகளை வைத்திருந்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு இவரை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான எருக்குலம்பிட்டியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
|