போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவுக்கு முச்சக்கர வண்டியொன்று நன்கொடையாக வழங்கப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், கடற்படையின் பணியாற்றும் போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி ஜெயரத்னவின் நோய்வாய்ப்பட்ட குழந்தை மருத்துவ வசதிகளுக்கு கொண்டு செல்ல ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
கடற்படையின் பணியாற்றும் இந்த மாலுமி தனது நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் கி மருத்துவ வசதிகள் பெறுவதுக்கு அடிக்கடி வருவதில் மிகவும் சிரமப்படுவதாகவும், போக்குவரத்துக்கு பெரும் தொகையை செலவிட வேண்டும் என்றும் கடற்படைக்கு தெரிவு படுத்தினார் அதன் படி கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில் கடற்படை நல நிதியம் தனது குழந்தையுடன் மருத்துவ வசதிகள் பெறுவதுக்கு செல்ல இந்த முச்சக்கர வண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதன்படி, கடற்படை பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகலவினால் கடற்படை தலைமையகத்தில் வைத்து போக்குவரத்து உதவியாளர் ஜி.எம்.என்.ஜி. ஜெயரத்னவிக்கு இன்று 2019 ஜூலை 08 அதிகாரப்பூர்வமாக முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக இயக்குனர் கடற்படை நலம்புரி கொமடோர் செனரத் விஜேசூரிய உட்பட சில கடற்படை அதிகாரிகள் கழந்துகொண்டனர். இந்த பெரிய பணியைச் செய் வதை குறித்து கடற்படை தளபதி மற்றும் முழு கடற்படைக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.