கடற்படை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அனுராதபுரம் பிராந்திய அலுவலகம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அனுராதபுரம் மாவட்ட செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் புதிய பிராந்திய அலுவலகம் இன்று (2019 ஜூலை17) பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

அதன்படி, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்காக அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் கடற்படையினரினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை அனுராதபுரம் மாவட்ட செயலாளர் திரு ஆர்.எம்.வன்னிநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன. இந்த கட்டுமான பணிக்கான சிரமம் கடற்படை வீரர்களால் வழங்கப்பட்டது. கடற்படையின் இந்த பங்களிப்பைப் பாராட்டி கடற்படைத் தளபதியிடம் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் அதிகாரிகளினால் நினைவு பரிசு வழங்கப்பட்டன.

இந் நிகழ்வுக்காக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலபதி திரு அசெல இத்தவெல, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சி.எச்.ஈ.ஆர்.சிரவர்தன, இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபயவின் கட்டளை அதிகாரி கேப்டன் சுமித்ர பொன்சேகா, அகி யோர் உட்பட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பல அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.