கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைது செய்ய கடற்படையின் உதவி

கடற்படையினர் மற்றும் மன்னார் காவல்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 16 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் நபரொருவரை மன்னாரில் கைது செய்துள்ளனர்.

அதன் படி வடமத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் மன்னார் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து மன்னார், சாலைத் தொகுதியில் வைத்து ஒரு சந்தேகநபரை சோதிக்கும் போது 300 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகநபர் 30 வயதான கண்டி, தெல்தெனியவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கஞ்சா தொடர்பாக மன்னார் காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கலால் கட்டளைச் சட்டத்தை மீறுவதன் மூலம் நடைமுறையில் இருக்கும் நாட்டில் சட்டவிரோத போதை மருந்துகளை விற்பனை செய்வதையும் வைத்திருப்பதையும் தடுக்க கடற்படை முக்கிய பங்களிப்பை வகிக்கின்றது.