இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கடற்படையினரினால் கைது
கடற்படையினர் போலீசாருடன் ஒருங்கிணைந்து 2019 ஜூலை 14 ஆம் திகதி யாழ்ப்பாணம், பண்டதிரிப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 09.590 கிலோ கிராம் கேரள கஞ்சா கொண்ட இருவரை கைது செய்தனர்.
அதன்படி, இல்லவாலே காவல்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் பண்டதிரிப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது ஒரு வீட்டிற்குள் வைத்திருந்த கஞ்சா பொதியுடன் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. மேலும் தேடியதில் சந்தேக நபர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45 மற்றும் 63 வயதுடைய பண்டதிரிப்பு மற்றும் மாதகல் பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டதுடன் சந்தேகநபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மீது இல்லவாலே காவல்துறை மேலதிக விசாரணை மேற்கொள்கிறது.
மேலும், 2019 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மேற்கொன்டுள்ள இதேபோன்ற சோதனையின் போது, ஒரு வீட்டிற்குள் வைத்திருந்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டன. நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முயற்சியில் பங்களித்த இலங்கை கடற்படை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.