யாழ்ப்பாணத்தில் நீல ஹரித சங்ராமய நிகழ்ச்சியின் மற்றொரு நிகழ்ச்சி

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கத்தின் ஒரு பகுதியாக தொடங்கிய பசுமை மற்றும் நீல சுற்றுச்சூழலுக்கான (நீல ஹரித சங்கிராமய) உந்துதலுக்கு இனையாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2019 ஜூலை 14 ஆம் திகதி கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்றை மேற்கொன்டுள்ளனர்.

அவ்வப்போது கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கங்களுடன் ஒத்துப்போக, இந்தத் திட்டம் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட இலங்கை கடற்படை கப்பல் கோட்டாய்ம்பர, வேலுசுமன மற்றும் காஞ்சதேவ ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் பங்கேற்பில் நடத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு 7 வது கெமுனு படை பிரிவின் வீரர்களும் இப்பகுதியில் ஏராளமான மக்களும் கழந்துக்கொன்டனர்.

அதன்படி, ஊற்காவட்துறை, சாடி கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த முயற்சியின் போது கடற்கரையை சிதறடித்த பாலிதீன், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் ஏராளமானவை அகற்றப்பட்டன.

இதற்கிடையில், ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் கடற்படை பணியாளர்கள் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடத்துகின்றனர், பசுமை மற்றும் நீல சுற்றுச்சூழலுக்கான உந்துதலுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். கடற்படை தீவைச் சுற்றி ஒரு சுத்தமான கடலோரப் பகுதியைப் பராமரிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சக்தியாக இருப்பது கடற்படைத் தளங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடற்கரைகளை சுத்தம் செய்ய வாராந்திர நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.