கடற்படைத் தளபதி கடற்படை ஆராய்ச்சி பிரிவின் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
கடற்படை ஆராய்ச்சி பிரிவின் (என்.ஆர்.டபிள்யூ) புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் ஜூலை 12 அன்று வெலிசரவில் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேற்கு கடற்படை பகுதி தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, கடற்படை ஆராய்ச்சி பிரிவின் தலைவர கேப்டன் பிரசாத் கரியப்பெரும, கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகள் மற்றும் கடற்படை ஆராய்ச்சி பிரிவின் கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், வைஸ் அட்மிரல் சில்வா இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில் கடற்படை ஆராய்ச்சி பிரிவின் வளாகத்தில் ஒரு மா மரக்கன்ற நட்டார்.
கடற்படை ஆராய்ச்சி பிரிவு கட்டுரை போட்டிகளை நடத்துகிறது மற்றும் கடற்படை வீரர்கள் எழுதும் திறனை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சி ஆய்வு துறையில் அவர்களின் அறிவை வளர்ப்பதற்கும் கடற்படை ஜர்னலை தொகுக்கிறது. கடற்படை ஆராய்ச்சி பிரிவு தவிர, இலங்கை கடற்படையின் வரலாற்றின் களஞ்சியமாக உள்ளது, இது எதிர்கால கடற்படையின் நலனுக்காக பாதுகாக்கப்படுகிறது.