சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு அமல்படுத்துவது பற்றிய கூட்டம் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது

சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு குறித்த பன்முகக் கூட்டம் 2019 ஜூலை 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றது.

காலி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலும், ஹம்பாந்தோட்டைதுறைமுக வளாகத்திலும் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல்களுக்கு தெற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப் போல் தலைமை தாங்கினார். துறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களின் பிரதிநிதிகளும், வணிகக் கப்பல் சேவை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகளின் பாதுகாப்பை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக கடற்படையின் பங்கு மற்றும் ஒவ்வொரு பங்குதாரரும் பராமரிக்க வேண்டிய தரநிலைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், துறைமுக வசதிகளின் பாதுகாப்பு அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ள பலவீனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், சமீபத்திய துறைமுக பாதுகாப்புப் பயிற்சிகளில் மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டன.

கொமடோர் அருண தனபால மற்றும் கொமடோர் அசோக விஜேசிரிவர்தன ஆகியோர் முறையே காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களின் துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் (PFSO) அதிகாரிகளாக இருந்தனர்.


Meeting on ISPS implementation of Galle harbour


Meeting on ISPS implementation of Hambantota harbour