இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக சீன மக்கள் குடியரசிடம் இலங்கை கடற்படைக்கு கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் இன்று (ஜூலை 08) காலை 0900 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டதுடன் இன் நிகழ்வுக்காக இலங்கையின் சீன மக்கள் குடியரசின் தூதர், அதிமேதகு சென்ங் ஜுயுவான் அவர்கள், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, இலங்கையின் இராணுவம், வான் மற்றும் கடற்படை விவகாரங்களுக்கான சீன பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கர்னல் சூ ஜியான்வே அவர்கள் உட்பட கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கழந்துகொண்டுள்ளனர்.
இக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின் கடற்படை தளபதி இக்கப்பலில் கண்காணிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு கப்பலின் செயல்திறன், செயல்பாடு தயார்நிலை மற்றும் தளவமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இக் கப்பல் விரைவில் அதிகாரம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இக் கப்பல் 112 மீட்டர் நீளம் மற்றும் 12.4 மீட்டர் அகலம் கொண்டுள்ளதுடன் சுமார் 2300 தொன் கொள்திறன் கொன்டுள்ளது. இக் கப்பலில் கட்டளை அதிகாரியாக கேப்டன் நலிந்த ஜயசிங்ஹ பணியாற்றிகிரதுடன் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 110 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது. இக் கப்பல் இலங்கை கடற்படை கப்பல்களுடன் சேற்ந்ததன் பின் இலங்கை கடல் எல்லைக் குழ் ரோந்து பணிகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகள் மற்றும் கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
|