கடற்படையினரினால் காங்கேசன்துறை கடலில் ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடித்துள்ளது.
வடக்கு கடற்படை கட்ளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் கட்டளை நீர்முழ்கி அதிகாரி உட்பட நீர்முழ்கி பிரிவினரால் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது காங்கேசன்துறை கடலில் இருந்து இது வரை கண்டுபிடிக்கப்படாத குறித்த பவளப்பாறயை கண்டுபிடித்துள்ளனர். இந்த பவளப்பாறை கடலில் 400 மீட்டர் நீளமாக பறவியுள்ளது.
பவளப்பாறைகள் கடலின் பல்லுயிரியலை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதியாகும், மேலும் அவை இயற்கை காரணங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் மனித நடவடிக்கைகள் காரணமாக சிதைந்துவிடும். இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த பவளப்பாறைகளைப் பாதுகாக்க வடக்கு கடற்படை கட்டளை செயல்பட்டு வருகிறது.
|