பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டமொன்று வடக்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்ட மற்றொரு பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டமொன்று 2019 ஜூலை 04 அன்று வடக்கு கடற்படைத் கட்டளையின் காங்கேசன்துறை கடற்கரையில் தொடங்கப்பட்டது.
தற்போது பல காரணங்களால் தொடர்ச்சியான அழிவுக்கு உட்பட்ட பவளப்பாறைகளை பாதுகாப்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும். அதன்படி, கடற்படை அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 11 பாறை துண்டுகளில் பவள மறு நடவு செய்யப்பட்டன. இந்த திட்டத்தை வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர முழு மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்பட்டது. மேலும், பவள நர்சரியின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கடற்படை இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
மேலும், இத் திட்டம் கடற்படையின் பசுமை மற்றும் நீல கருத்தாக்கத்துடன் (நீல ஹரித சங்கிராமய) கைகோர்த்து செயல்பட்டு, தீவு முழுவதும் பல கடற்கரை பகுதிகளில் தற்போது பல பவளப்பாறைகள் மறுசீரமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.