விற்பனைக்காக இருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரினால் கைது
2019 ஜூலை 02 ஆம் திகதி கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக இருந்த 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளன.
அதன் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இவர்களை மேலும் விசாரிக்கும் போது இவர்களிமிருந்து 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கேரள கஞ்சா பொதிகள் விற்பனைக்காக முச்சக்கர வண்டி மூலம் கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.
38 மற்றும் 42 வயதிற்குட்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கற்பிட்டி பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், கேரளா கஞ்சா பொதி மற்றும் முச்சக்கர வண்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல கேரள கஞ்சா விற்பனையாலர்கள் கைது செய்யப்பட்டனர்.