கடலில் துன்பப்படும் மீனவர்களை மீட்க கடற்படை ஆதரவு

இலங்கை கடற்படை கப்பல் ‘சாகர’ வின் குழுவினர் 2019 ஜூலை 01 ஆம் திகதி கடலில் பாதிக்கப்பட்ட கப்பலொன்றை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர உதவியது.

என்ஜின் செயலிழப்பு காரணமாக கடலில் துயரமடைந்த “நிமேஷிகா” என்ற மீன்பிடி படகை பற்றி மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்திடமிருந்து தகவல் கிடைத்ததும், கடற்படை தலைமையகம் வழங்கிய உத்தரவின் பேரில், தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் ‘சாகர’ கடினமான கடல் நிலைமைகளுக்கு மத்தியில் ஒரு மீட்பு பணிக்காக அனுப்பப்பட்டது.

அதன்படி, 2019 ஜூலை 01 ஆம் திகதி மாலை 0540 மணியளவில், கிரிந்த, மஹா ராவனா கலங்கரை விளக்கத்திலிருந்து 24 கடல் மைல் தொலைவில் உள்ள கடல்களில் சறுக்கிச் செல்லும் இலங்கை கடற்படை கப்பல் “சாகர” துயரமடைந்த படகை கவனித்ததுடன் குறித்த கப்பலை இழுத்து வந்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இருந்த கப்பலை பாதுகாப்பாக கிரிந்த மீன்வள துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க புறப்பட்ட ‘ஷானு’ என்ற மற்றொரு படகிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் இலங்கை சுற்றி உள்ள கடல் பயன்படுத்திகின்ற மீன்பிடி சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற எந்தவித ஆபத்துக்கும் உதவ கடற்படை தயாராக உள்ளது