தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்துக்காக கடற்படையின் பங்களிப்பு
போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர், 2019 ஜூன் 27 அன்று கெக்கிராவ பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு திட்டமொன்றை நடத்தினர்.
அதன்படி, வட மத்திய மாகாண மக்களை நோக்கமாகக் கொண்ட போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பான சமூக அடிப்படையிலான திருத்தங்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு திட்டம் கெகிராவ பிரதேச செயலகத்தில் வசிக்கும் மக்களுக்காக ராம்பேவ பகுதியில் நடைபெற்றது.
இந்த போதைப்பொருள் தடுப்பு திட்டம் கடற்படையால் பிரதேச செயலக மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு திட்டங்களுடன் இணைந்து நடைபெற்றது, இதில் அரசு / தனியார் துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இது தவிர, கடற்படை அனைத்து கடற்படை கட்டளைகளிலும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை திட்டங்களை நடத்துகிறது மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தவிர்ப்பதற்காக கடற்படை சோதனைகள் மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.