சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
முல்லைதீவிலுள்ள கொக்குத்துடுவாய் பகுதியில் இன்று (ஜூன் 29) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
அதன்படி, கொக்குத்துடுவாயில் கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது ஒருவர் சட்டவிரோத விளக்கைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு, ஒரு டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம், மின்சார ஜெனரேட்டர் மற்றும் ஒன்பது விளக்குகள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் புத்தலத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் டிங்கி, வெளிப்புற மோட்டார், ஜெனரேட்டர், மின்சார விளக்குகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை முல்லைதீவு மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.