கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படை ஆதரவு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இலங்கை கடற்படை தனது அன்பான விருந்தோம்பலை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வருடாந்தம் இடம்பெறும் இப்பாத யாத்திரைக்கு நெடுந்தூரம் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுரை படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில அவருடைய வழிகாட்டலின் கிழ் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் வீர்ர்கள் இன்று ஜூன் 27 ஆம் திகதி இருந்து பல்வேறு முன்னெடுப்பபுக்களை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இன்று காலை உகந்த முகுகன் தேவலாயை வணங்கிய பக்தர்கள், குமன தேசிய பூங்கா வழியாக கதிர்காமம் நோக்கி நடைப்பயணத்தை தொடங்கினர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடற்படையினரினால் கடுமையான பயணத்தில் ஈடுபடுகின்ற பக்தர்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டன.
|