கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது
2019 ஜூன் 26 ஆம் திகதி முலதிவுவில் உள்ள கொக்குத்துடுவாய் பகுதியில் வைத்து கடற்படை வீரர்களினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையுடன் ஒரு டிங்கி படகொன்றை கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது கைவிடப்பட்ட ஒரு டிங்கியைக் கவனித்தனர். அங்கு கடற்படையினர் மேற்கொன்டுள்ள மேலதிக தேடலின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மற்றும் ஒரு OBM ஆகியவை மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட டிங்கி படகு, OBM மற்றும் மற்ற பொருட்கள் மேலதிக நடவடிக்கைக்காக முல்லைதிவு மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.