18.9 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

தலைமன்னார் கஹடஸ் பத்திரி பகுதியில் கைவிடப்பட்ட 18.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கி படகை 2019 ஜூன் 26 ஆம் திகதி கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், கஹடஸ் பத்திரி பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது கைவிடப்பட்ட கேரள கஞ்சாவுடன் ஒரு டிங்கியைக் கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படை வீரர்கள் ரோந்துப் பணிகளை நடத்துவதை கவனித்த சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக சந்தேகப்படுகின்றது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொதி, டிங்கி, ஓபிஎம் மற்றும் பிற மீன்பிடிபொருட்கள் ஆகியவை சட்ட நடவடிக்கைகளுக்காக பெசலே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.