கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது
திருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை குழுவினர் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது,பெக் பே கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்தனர். சந்தேக நபர்களுடன் 04 டிங்கி, 2 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் 519 கிலோ கிராம் சட்டவிரோத மீன்கள் ஆகியவை கடற்படையினரால் பறிசோமனை செய்யப்பட்டன. மேலதிக விசாரணையின் மூலம், 4 டிங்கிக்களில் 2 அதே எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட மற்றொரு மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, உப்பாரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது. ஒரு டிங்கி, தடைசெய்யப்பட்ட வலையும், சட்டவிரோதமாக பிடிபட்ட 261 கிலோ கிராம் மீன்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கி படகுகள், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள், மீன் பிடிப்பு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றுடன் சீனா பே பொலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டது.