அனுராதபுரத்திற்க்கு புனித நகரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை ஆயத்தம்
அநுராதபுரம் புனித நகரத்தை மையப்படுத்தி பொசொன் பண்டிகை காலத்தின்போது புனித ஸ்தலங்களை வணங்குவதற்காகவும், நகரின் சுற்றுப்பகுதியிலும் ஏற்பாடு செய்யப்படும் பொசொன் மண்டலங்களை பார்வையிடவும் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நிவாரண குழுக்கள் கடற்படையினரால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனுராதபுர மாவட்டத்தில் பாசவகுலம குலம், மகாநாதரவாவா குலம், நாச்சடுவ குலம், விலாச்சிய குலம், ராஜாங்கனை குலம், நுவர குலம், கலா வேவா, திஸ்ஸ குலம் ஆகியவற்றை உள்ளடக்கும் வட மத்திய கடற்படை கட்டளை உட்பட 12 வாழ்வாதார பாதுகாப்புக் குழுக்கள், அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசரமான சந்தர்ப்பத்தில் கடற்படையினரின் ஆம்புலன்ஸின் ஆதரவு வழங்கவும் மற்றும் ஒரு கடற்படை சுழியோடிகள் குழுவும் நிறுத்தப்பட்டன. இவ் அணிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இரண்டு குழுக்கள் அனுராதபுர மாவட்ட செயலகம் மற்றும் ராணுவ 21 வது படைப்பிரிவில் நிறுவப்பட்டுள்ளன.