கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது
கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று (ஜூன் 12) கொழும்பு பேராயர் புனிதத்தன்மை மால்கம் கார்டினல் ரஞ்சித் பேராயரிடம் தலைமையில் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் புதுப்பிக்கும் நடவடிக்கைள் கடற்படையினரால் பொறுப்பேற்ற பிறகு கடற்படை பொறியாளர்களின் மற்றும் கட்டடக் கலைஞர்களின் பங்களிப்பில் மிகவும் மிகவும் உயர்ந்த நிலையில் மற்றும் அழகான முறையில் உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புனரமைப்புக்காக அதிமேதகு ஜனாதிபதி திரு. மைத்ரிபால சிறிசேனவின் முழுமையான மேற்பார்வை மற்றும் ஆசீர்வாதம் கிடைத்தன. மேலும் இந்த செயல்முறைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவைப் வழங்கப்பட்டன. மேலும் தானாக முன்வந்தது அமெரிக்காவின் ரிசால்வ் மரைன் டைவிங் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோசப் ஈ. ஃபாரல் அவர்களினால் 60,000.00 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும் இங்கு கட்டுமான நோக்கங்களுக்காக கட்டடக் கலைஞர்களாக பணியாற்றிய மனோஜ் க்ரூஸ் மற்றும் பெதும் மாகால்ல ஆகியோரின் பங்களிப்பு, இந்த கட்டிடம் அழகுபடுத்தலுக்கு பங்களித்தது.
மேலும் கச்சத்தீவு ஆலயத்தின் நிர்மானப் பணிகள் மேற்கொன்டுள்ள கடற்படை கட்டடக் கலைஞரே குறித்த ஆலயத்திலும் புதுப்பிக்கும் நடவடிக்கைள் மேற்கொன்டுள்ளார். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கிழ் கடற்படையினர் இரவும் பகலும் தொடர்ந்து பணியாற்றி இந்த ஆலயத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைள் நிறைவு செய்தனர். அதன் பிரகாரமாக இந்த ஆலயம் முன்பு இருந்ததை விட உயர்ந்த மற்றும் அழகிய முறையில் புதுப்பித்து கிரிஸ்துவர் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய வாய்ப்பு கடற்படையினரினால் வழங்கப்பட்டன.
இன் நிகழ்வுக்காக சபாநாயகர், தேசபந்து கரு ஜயசூரிய உட்பட அமைச்சர்கள், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியல், ரியர் அட்மிரல் சுசில சேனாதிர உட்பட கடற்படையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள், வீர்ர்கள் மற்றும் இப் பகுதியில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், பக்தர்கள் கழந்துகொன்டனர்.