சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு திட்டம்
கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றி மீன்பிடி சமூகத்திற்கு விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜுன் மாதம் 07ஆம் திகதி தென் கடற்படை கட்டளையில் இடம்பெற்றது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடலுக்கு மற்றும் கடற்கரைக்கு ஏற்படுகின்ற விளைவுகளை கட்டுப்படுத்த மீன்பிடி சமூகத்தை விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் சிறப்பு கண்காணிப்பின் கீழ் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றதுடன் இதன் மற்றொரு திட்டம் தென் கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் கஸ்ஸப போலுடய வழிமுறைகளில் படி தென் கடற்படை கட்டளையில் நடத்தப்பட உள்ளது. குறித்த திட்டம் இரு வார காலத்திற்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அங்கு கடற்றொழில் சட்டம், ஒழுங்குமுறை மற்றும் கெஸட் பத்திரிக்கைகள், தடைசெய்யப்பட்ட மீனவள முறைகள், பல்வேறு குற்றங்கள், தண்டனைகள் மற்றும் வெடிமருந்துகள் பயன்படுத்தி மீன்பிடித்தல் தொடர்பான சட்டங்கள் பற்றி மீன்பிடி சமூகத்தை விழிப்புணர்வு படுத்தப்பட்டன.
மேலும் இங்கு மீனவர்களின் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் தடுக்க கடற்படையினரினால் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் பற்றி மீனவர் சமூகத்துக்கு தெரிவிக்க எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிரகாரமாக தொடங்தூவ மீன்வள துறைமுகத்தில், வெலிகம பிரதேச செயலகத்தில் மற்றும் காலி துறைமுகத்தில் குறித்த மீனவர்கள் விழிப்புணர்வு திட்டம் நடத்தபட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டங்களை செயல்படுத்த தென் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ‘தக்ஷின’ மற்றும் இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனங்களில் பொது மக்கள் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இப் பகுதி மீன்வளத்துறை ஆய்வாளர்கள் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள்.
தொடங்தூவ மீன்வள துறைமுகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு திட்டம்