சீன மக்கள் குடியரசின் பி 625 கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு

சீன மக்கள் குடியரசு மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு பெறப்பட்டுள்ள பி 625 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2019 ஜூன் 05 ஆம் திகதி ஷேன்ஹாயில் இலங்கை கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இடம்பெற்றது.

அதன் பிரகாரமாக சீன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் பேன் ஜியான்ஜூன் மூலம் பி 625 கப்பலின் கட்டளைத் தலபதி கெப்டன் நலிந்த ஜயசிங்ஹ அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

1994 ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த கப்பல் 112 மீட்டர் நீளம் மற்றும் 12.4 மீட்டர் அகலம் கொண்டுள்ளதுடன் சுமார் 2300 தொன் கொள்திறன் கொன்டுள்ளது. இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 92 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது. இது இலங்கை கடற்படை கப்பல்களுடன் சேற்ந்த்தன் பின் இலங்கை கடல் எல்லைக் குழ் ரோந்து பணிகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகள் மற்றும் கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றக நடவடிக்கைகளுக்காக இக்க்கப்பல் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பீ 625 கப்பல் பெற்றுக்கொள்ளும் விழாவுக்காக சீனாவில் இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் கல்ப சஞ்சீவ மற்றும் இலங்கை கடற்படையின் மூத்த அதிகாரிகள் உட்பட கப்பலின் ஊளியர்கள் கழந்துகொன்டனர்.

இக் கப்பல் வரும் ஜூன் 14 ஆம் திகதி இலங்கைக்கு பயணிக்க உள்ளதுடன் ஜூன் மாதம் இருதியில் இலங்கைக்கு வந்தடையும்.