ஐக்கிய அமெரிக்க பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு
அமெரிக்க அரசுத்துறையின் மற்றும் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதிகள் 2019 ஜூன் 04 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்கவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
அதன் பிரகாரமாக, அமெரிக்க அரசுத்துறையின் உதவி செயலாளர் க்லார்க் கூபர் உட்பட 06 பேர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.