மன்னார் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையில் இருந்து 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்க கடற்படை ஆதரவு
கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து 2019 ஜுன் 03 காலை மன்னார் பெரியகாமன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது மரம் அறுக்கும் ஆலையமொன்றில் மறைக்கப்பட்டுருந்த 526 கிலோகிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மன்னார் பெரியகாமன் பகுதியில் மரம் அறுக்கும் ஆலையொன்றில் மறைக்கப்பட்டுருந்த புகையிலை பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 526 கிலோ கிராம் புகையிலை போக்குவரத்துக்காக பயன்படுத்திய கெப் வன்டி மற்றும் குறித்த மரம் அறுக்கும் ஆலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிலை பொதி, கெப் வன்டி, மரம் அறுக்கும் ஆலையத்தின் உரிமையாளர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் சுங்கப்பணியினையிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் 2019 ஜூன் 02 திகதி இரவு தலைமன்னார் கடலிருந்து 451 கிலோ கிராம் புகையிலை மற்றும் 5300 புகை தூள் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன