வெசாக் போயா தினத்தை முன்னிட்டு கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள்
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு இன்று (மே 18) கடற்படைத் தலைமையகத்தில் தர்ம விரிவுரை மற்றும் தான திட்டங்கள் இடம்பெற்றன.
அதன் படி கடற்படை சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட் குழுவினரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தர்ம விரிவுரை பொல்பிதி முகலானே பஞ்ஞாசிரி தேர்ரினால் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் யுத்ததில் உயிர் தியாகம் செய்த மற்றும் ஊனமுற்ற படையினர்கறுக்கு புன்னிமாக 25 சங்க தேர்ர்களுக்கு பகல் தானம் வழங்கப்பட்டன.
இந்த மத நிகழ்வுகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி அருந்ததி உதிதமாலா ஜயநெத்தி, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா ஆகியவர்கள் உட்பட பல கடற்படை உறுப்பினர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
|