கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் கட்டிடம் மாணவர்களுக்கு திறந்து வைக்கபபட்டன
இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கட்டிடம் மாணவர் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டன.
இன் நிகழ்வுக்காக பூசாரிகள், இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிருவனத்தின் நிர்வாக அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் பீ.ஜி தம்மிக உட்பட நிருவனத்தின் சில அதிகாரிகள், பாடசாலையின் முதல்வர், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்
இந்த கட்டிடத்தின் பழுது பார்க்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவில் குடியிருக்கின்ற லக்ஷ்மி கென்டர் அவர்களின் நிதி அர்ப்பணிப்பின் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடற்படை சிவில் பொறியியல் பிரிவின் உதவியுடன் புதுபிக்கப்பட்டன.
மேலும் இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகளில் விரைவான செயல்பாட்டைப் பற்றி பாடசாலையின் முதல்வர் மற்றும் பெற்றோர்கள் கடற்படைக்கு புகழை வழங்கியதுடன் கடற்படையினரினால் மேற்கொள்கின்ற இவ்வாரான சமூக நலத் திட்டங்கள் மூலம் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இது ஒரு பெரிய உதவி என்று நம்பப்படுகிறது.