சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரினால் கைது
கொக்குதுடாய் கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இன்று (மே 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கொக்குதுடாய் பகுதி கடலில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன. அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்திய 02 டிங்கி படகுகள், 02 வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோத 03 மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட 565 கிலோ கிராம் மீன் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் புல்முடை பகுதியில் வசிக்கின்ற வர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், படகுகள், வெழி எரி இயந்திரங்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட மீன் பொதி மற்றும் மற்ற மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.