ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் ஜகத் ரனசிங்க இன்றுடன் (மே 03) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
அவரது 55 வது பிறந்த நாள் இன்றய தினத்துக்கு ஈடுபட்டுள்ளதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் உட்பட இயக்குநர்கள் வாரியம் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தங்கலுடைய வாழத்துக்கள் தெரிவித்தனர். அதன்பின் அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரேஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாய் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.
1984 ம் ஆண்டில் 12 வது ஆற்சேற்ப்பின் கேடட் அதிகாரியாக கடற்படையில் இனைந்த ரியர் அட்மிரல் ரனசிங்க அவர்கள் தன்னுடைய சேவை காலத்தின் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி,கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை அதிபர் ஆகிய பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.