சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கடற்படையினரினால் கைது

திருகோணமலை, செபல் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் நேற்று (ஏப்ரில் 30) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் கின்னியா, திருகோணமலை பகுதிகளில் வசிக்கின்ற 23,26,29,30,32,35,36,37 மற்றும் 38 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

அங்கு பிடிக்கப்பட்ட 50 கிலோ கிராம் மீன், மீன்பிடிக்கப் பயன்படுத்திய 250 மீட்டர் நீளமான சட்டவிரோத மீன்பிடி வலையொன்று கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன. குறித்த நபர்கள் மீன் பொதி, ஒரு வெழி எரி இயந்திரம், மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.