கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்
கடந்த 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் இன்று (ஏப்ரில் 27) சுத்தம் செய்யப்பட்டது.
அதன் பிரகாரமாக பாதுகாப்பு படைகளின் தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்னவின் வழிமுறைகளின் படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் வழிகாட்டலில் கடற்படை துனை தலைமை பணியாளர் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் 100க்கு மேற்பட்ட கடற்படை உறுப்பினர்கள் இன் நிகழ்வுக்காக கழந்துக்கொண்டனர்
இன் தொடர் நிகழ்ச்சிகளின் முதல் கட்டம் இன்று நாள் முழுவதும் இடம்பெற்றதுடன் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த குப்பைத் தொட்டிகளும், பாதிக்கப்பட்ட நபர்களின் சேதமடைந்த பொருட்களும் கட்டத்தின கட்டம் அகற்றப்பட்டுள்ளதுடன் ஆலயம் முழுமையாக இரசாயனங்கள் பயன்படுத்தி கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இன் நிகழ்வுக்காக கடற்படையின் தீ பேரழிவு வாகனங்கள், நீர் பவுசர்கள், டிரக்குகள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் உடனடியாக தேவாலயம் புதுப்பிக்கும் நடவடிக்கைகள் கடற்படையினரினால் மேற்கொள்ளப்படுகின்றது.
|