'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் காசோலை வழங்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற 'மெத்செவென' அரை வீடமைப்பு திட்டத்தின் கீழ் 46 பேருக்கு காசோலைகள் வழங்கும் விழா நேற்று (ஏப்ரில் 26) இடம்பெற்றன.
அதன் பிரகாரமாக 2019 ஆண்டில் முதல் கட்டத்தின் கீழ், செயல்பாட்டு கடமைகளில் ஈடுபட்டுருந்த போது தாய்நாட்டுக்காக தன்னுடைய வாழ்வை தியாகம் செய்த, ஓய்வுபெற்ற ஊனமுற்றோர் மற்றும் ஊனமுற்ற செயல்பாட்டு கடமையை செய்யும் 46 கடற்படையினர்களுக்குகாக காசோலைகள் வழங்கும் விழா கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றன. பயனாளிகளுக்கு தங்களுடைய வீடுகளின் முதல் கட்டத்தை முடிக்க இந்த காசோலைகள் வழங்கப்பட்டன.
குறித்த காசோலைகள் கடற்படை உறுப்பினர்களுக்கு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் நிகழ்வுக்காக மூத்த ஊழியர் அலுவலர் (நலன்புரி) கொமான்டர் இந்திக எதிரிசிங்க மற்றும் நிலம் மற்றும் வீடமைப்புத் திட்டத்தின் மூத்த ஊழியர் அலுவலர் (நலன்புரி) கொமான்டர் ரோனி அதுகோரல உட்பட கடற்படை நலன்புரி பிரிவின் சில அதிகாரிகள் கழந்துகொன்டனர்.