கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமியை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் ஆதரவு
இலங்கை கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre) கிடத்த தகவலின் படி லிபியாவின் வர்த்தக கப்பலான கே.எம் வீபா (KM WEIPA) என கப்பலில்லுள்ள கடுமையாக சுகயீனமுற்றிருந்த வெளிநாட்டு மாலுமி ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் இன்று (ஏப்ரில் 07) காலை ஆதரவு வழங்கியது.
இந்தியாவில் ஹால்டியா துறைமுகத்திலிருந்து சிங்கப்பூரில் செண்டோசா துறைமுகத்திற்குச் பயணித்துக்கொண்டிருந்த குறித்த கப்பலில் காயமடைந்த ஒருவர் இருக்கிறார் என்று இலங்கை கடற்படைக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை கடற்படைதெற்கு கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகின் மூலம் குறித்த நபரை தேடி விரைந்தனர்.
அதன் பிரகாரமாக சங்கமன்கந்த கலங்கரை விளக்கிலிருந்து 42 கடல் மைல் தொலைவில் இன்று காலை 0400 மணிக்கு குறித்தவரை கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்து மாலுமியை மாற்றப்பட்டு அதிவிரைவு தாக்குதல்தாக்குதல் படகின் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட மாலுமியை மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்ட்டார்.