"சாகர" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து தாயகம் திரும்பியது
மலேசியா லங்காவி தீவில் நடைபெற்றுள்ள “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மார்ச் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பல் சாகர தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று ஏப்ரில் 05 தாயகம் திரும்பியது. திருகோணமலை துறைமுகத்திக்கு வந்தடைந்த சாகர கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்
இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் உபுல் த சில்வா, உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டனர். அங்கு கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் அனில் போவத்த மற்றும் துனை தளபதி இடையில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
“லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” நிகழ்வு மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மலேசியா லங்காவி தீவில் இடம்பெற்றுள்ளதுடன் அங்கு இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கடற்படையினர் கலந்துகொன்டனர். மேலும் மலேஷியாவில் அதிகாரப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கடந்த மார்ச் 27 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் கண்கானிப்பு விஜயமொன்றும் மேற்கொன்டுள்ளார்.
|