07 வது சமச்சீரற்ற போர் உத்திகள் பயிற்ச்சி வெற்றிகரமாக நிறைவு

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் 07 வது தடவயாக ஏற்பாடுசெய்யப்பட்ட சீரற்ற இராணுவ யுத்த பயிற்ச்சியின் சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழா கடந்த (ஏப்ரல் 02) ஆம் திகதி திருகோனமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தின் இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வுக்கு தலைமை அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின்’ தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க பங்கேற்றார். குறித்த பயிற்ச்சி ஜனவரி 07 ஆம் திகதி முதல் ஏப்ரில் 02 ஆம் திகதி வரை கடற்படை சிறப்பு படகு படையணி தலைமையகத்தில் உள்ள பயிற்ச்சி பாடசாலையில் இடம்பெற்றது.

தலைமை அதிதியாக கழந்துகொன்ட கட்டளை தளபதியவர்கள் முப்பது ஆண்டுகள் ஆயுத மோதல்களிலிருந்து படிப்பினையும், அறிவையும் கற்றுக் கொண்ட நாங்கள் உலகில் சமாதானத்திற்கான நட்பு நாடுகளுடன் பங்குபெற கிடைத்தது மிகுந்த சந்தோஷம் என்று கூறினார்.

இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை மூலம் முழு பங்களிப்பு வழங்கிய குறித்த பயிற்சி 12 வாரங்களாக இடம்பெற்றதாக குறிப்பிடத்தக்கது. வங்காளம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவு, நைஜீரியா, பாக்கிஸ்தான், அமெரிக்க மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் குறித்து 08 கடற்படை உறுபினர்கள் உடனிருந்தனர்

மூன்று மாதங்களாக இடம்பெற்ற குறித்த கடற்படை பயிற்சியின் போது எல்.டி.டி.இ கடல் பயங்கரவாதிகளின் கடல் தந்திரோபாயங்கள் மற்றும் முறைகள், ஆயுத பயிற்சி, போர் பயிற்சி, சிறிய குழு நடவடிக்கை, வனப் போர் பயிற்சி மற்றும் சிறிய படகு நடவடிக்கைகள், கடலில் வாழ்க்கை பாதுகாக்தல் ஆகிய பல பல பயிற்ச்சிகள் மேற்கொள்ளப்ட்டன.

குறித்த சான்றிதழ்கள் வழங்கள் மற்றும் பதக்கங்கள் அணிந்து விழாவுக்காக இலங்கையின் நெதர்லாந்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பீயர், கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆநந்த குருகே ஆகியோருடன் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.