சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த நான்கு (04) நைஜீரியர்கள் கடற்படையினரினால் கைது
இலங்கை கடல் பகுதியில் இடம்பெறுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் நேற்று (மார்ச் 31) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மன்னார் கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் நான்கு (04) நைஜீரியர்கள் மற்றும் இலங்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தலைமன்னார் கலங்கரை விளக்குக்கு வடக்கு பகுதியில் 12 கடல் மைல்கள் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்று கடற்படையினரினால் கன்கானிக்கப்பட்டதுடன் குறித்த படகை கடற்படையினரினால் சோதிக்கப்பட்டன. பின்னர் சட்டவிரோதமாக மன்னார், பேஸாலை பகுதியில் இருந்து கடல் வலியாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த நான்கு (04) நைஜீரியர்கள் மற்றும் இரண்டு (02) இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்ட்ட நைஜீரியர்கள் 26,27,32 மற்றும் 42 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தலைமன்னார், பேஸாலை பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 23 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் தலைமன்னார், இலங்கை கடற்படை கப்பல் “தம்மென்னா” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படை மூலம் நிரந்தரமாக மேற்கொள்ளப்படுகின்ற ரோந்து நடவடிக்கைகளினால் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் உட்பட, பல சட்டவிரோதமான இடம்பெயர்வுகள் வெற்றிகரமாக தடுக்கப்படுகின்றது.
|