கடற்படையினரால் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) நிகழ்ச்சித்திட்டம்
புத்தளம் கங்கேவாடிய எலுவான்குளம் பிரதேசத்திலுள்ள அதிவிரைவு தாக்குதல் படகுகள் தலைமையகம், இந்து – பசுபிக் எண்டீவர் – 2019 உடன் இணைந்து கூட்டு மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண (HADR) பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை புதன்கிழமையன்று (மார்ச், 27) நடாத்தியுள்ளது. இதன்போது அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பாக துரித இயக்க மீட்பு மற்றும் நிவாரனப் பிரிவில் (4RU) இணைப்புப் பெற்ற கடற்படை வீரர்களால் அவர்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையிலான செயல்விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.
இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், வெள்ள அனர்த்த மாதிரி பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் நிலச்சரிவு மாதிரி பயிற்சி நடவடிக்கைகள் என்பன இடம்பெற்றுள்ளன. இங்கு இடம்பெற்ற சில பயிற்சி நடவடிக்கைகளில் இலங்கை வீரர்களுடன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படை வீரர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வில், வடமேற்கு கடற்படை கட்டளை தளபதி, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகள்,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
|